உன் நினைவலைகளில் நான்

காதல் என்னும் மை எடுத்து நான் உன் முகம் வரைய நினைத்த வேளை என் உயிர் ஊசல் ஆடுதடி

என் உயிர் பிரியும் முன் உன் முகம் நான் வரைய மாட்டேனா உன் நினைவில் என்றும் நான்.

இனிய காலைப் பொழுது

மெல்லிய இளந் தென்றல் வீச இலைகளின் மேல் உள்ள பனித்துளிகள் காற்றின் இதமான அசைவால் ஒன்றுடன் ஒன்று தழுவிய வண்ணம் இருக்கின்றன.

இவற்றின் மத்தியில் வைகறையின் கதாநாயகன் தங்கத்தை குளைத்து தனது உடல் எங்கும் விசிறிய வண்ணம் தனது ஒளியினைப் பரப்ப எண்ணி வான் மேல் வீறு நடை போ டுகின்றான்

ஜந்தறிவு ஜீவன்கள் தத்தமதது குரல்களால் இறைவனைப் புகழ்ந்த வண்ணம் எழுகின்றன உறக்கத்தில் இருந்த மெட்டுக்கள் இதல்களை மெல்ல மெல்ல திறக்கின்றன.

செவ் வானம் சிவக்க அனைவரும் தத்தமது வேலை ஆரவாரத்துடன் தொடங்குகின்றனர்.

எதற்கும் கலங்காத யாழ் மகன்

காலத்தினை வென்று கால் பதிக நினைப்பவன். யாழ் மகன் காலத்தை வென்ற நாயகன். அவன் கயவர்களுக்கும் காமவெறி பிடித்தவர்களுக்கும் அரக்க குணம் படைத்தவன். காவிய நாயகர்களுக்கு அவன் ஒரு கவி பாடி.